search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உத்தரப்பிரதேச பருவமழை"

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 154 ஆக அதிகரித்துள்ளது. #UPRain
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பருவ மழை பெய்து வருகிறது.  இதன் காரணமாக மாநிலத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக, மதுரா, ஆக்ரா, மீரட், முசாபர்நகர், காசியாபாத், ஜான்சி உள்பட பல்வேறு நகரங்கள் பெய்த மழையால் வெள்ளக் காடானது.

    கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியும், வீடுகள் இடிந்தும், இடி, மின்னல் தாக்கியும் இதுவரை100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

    இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பெய்த கனமழையில் சிக்கி கடந்த ஒரு மாதத்தில்  பலியானோர் எண்ணிக்கை 154 ஆக அதிகரித்துள்ளது.

    மேலும், 131க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 1250க்கு மேற்பட்ட வீடுகள் பெருத்த சேதம் அடைந்தன.  187 கால்நடைகள் இறந்துள்ளன.

    முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை விரைவில் செய்து தரும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

    இதேபோல், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவைப்படும் வசதிகளை செய்து தரவேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். #UPRain
    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 100-ஐ தாண்டியது. #UPRain
    லக்னோ:

    பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.

    குறிப்பாக, மதுரா, ஆக்ரா, மீரட், முசாபர்நகர், காசியாபாத், ஜான்சி உள்பட பல்வேறு நகரங்கள் பெய்த மழையால் வெள்ளக் காடானது.

    வெள்ளத்தில் சிக்கிய வீடுகள் இடிந்தும், இடி, மின்னல் தாக்கியும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இதுவரை 80 பேர் பலியாகினர்.



    இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது.

    மேலும், 150க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 1100க்கு மேற்பட்ட வீடுகள் பெருத்த சேதம் அடைந்தன.

    மழையில் சிக்கி பலியானோர் குடும்பத்துக்கு முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தலா ரூ. 4 லட்சம் வழங்கப்படும். சேதமடைந்த வீடுகளை சீரமைக்க தேவையான நிதியுதவி அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    அடுத்த 24 மணி நேரத்துக்கு உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கிழக்கு பகுதியில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. #UPRain
    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த 4 தினங்களாக பெய்த கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது. #UPRain
    லக்னோ:

    பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. மதுரா, ஆக்ரா, மீரட், முசாபர்நகர், காசியாபாத், ஜான்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் பெய்த மழையால் வெள்ளக் காடானது.

    வெள்ளத்தில் சிக்கிய வீடுகள் இடிந்தும், இடி, மின்னல் தாக்கியும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இதுவரை 70 பேர் பலியாகினர்.

    இந்நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் சஹரான்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையில் சிக்கி 10 பேர் பலியாகி உள்ளனர்.



    இதையடுத்து, உபி கனம்ழையில் சிக்கி பலியானவ்ர்களின் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது. வீடு இழந்தவர்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய வசதிகளை செய்து வருகிறோம் என பேரிடர் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். #UPRain

    பருவமழை தீவிரம் அடைந்துள்ள உத்தரப்பிரதேச மாநிலத்தில் கனமழைக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70-ஆக உயர்ந்துள்ளது. இன்னும் சில நாட்கள் கனமழை நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. #UPRain
    லக்னோ:

    பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், மதுரா, ஆக்ரா, மீரட், முசாபர்நகர், காசியாபாத், ஜான்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் வெள்ளக் காடானது.

    இதில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 70-ஆக உயர்ந்துள்ளது. 50-க்கு  மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆக்ராவில் 5 பேரும், மெயின்புரியில் 4 பேரும், முசாபர் நகர், கஸ்கஞ்ச் பகுதிகளில் 3 பேரும், கான்பூர், மதுரா, காசியாபாத், ரே பரேலி உள்ளிட்ட பகுதிகளில் தலா ஒருவரும் பலியாகி உள்ளனர்.

    கான்பூர் மாவட்டம் கங்கை நதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கங்கை நதிக்கரையோரத்தில் தாழ்வான பகுதியில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.



    மீட்பு மற்றும் நிவாரண பணிகளை முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் முடுக்கி விட்டுள்ளார். கனமழையில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்துக்கு முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளர். அத்துடன், பலியானோர் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

    வீடு இழந்தவர்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்கவும், அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய வசதிகளை செய்து கொடுக்கும்படியும் உத்தரவிட்டிருக்கிறார். இந்த கனமழை இன்னும் சில நாட்கள் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. #UPRain

    ×